Header Ads



ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு பலத்த பாதுகாப்பு


இன்று -04-  பல தரப்பினர் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு முன்பாக வந்து சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.


இதையடுத்து, கிரிக்கெட் நிறுவனத்திற்கு முன்பாக பாதுகாப்பை பலப்படுத்த பொலிஸாரும் கலகத் தடுப்புப் பிரிவினரும் அழைக்கப்பட்டுள்ளனர்.


இலங்கை கிரிக்கெட் அணியின் படு தோல்வியுடன், இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு மற்றும் நிறுவன நிர்வாகிகள் உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும் என அரசியல்வாதிகள், சிவில் ஆர்வலர்கள் மற்றும் விளையாட்டு ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.


நேற்றைய தினம் இலங்கை அணி தோல்வியடைந்துள்ள நிலையில், தற்போதைய இலங்கை கிரிக்கெட் நிர்வாகிகள் மற்றும் தெரிவுக்குழு மீது சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

No comments

Powered by Blogger.