Header Ads



ஹமாஸின் வெற்றிக்கு என்ன தெரியுமா காரணம்..? நஸ்ருல்லாஹ்வின் விளக்கம்


ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதல் சரியானதுதான் என்று ஹிஸ்புல்லாஹ் தலைவர் நஸ்ரல்லாஹ் புகழாரம் சூட்டியுள்ளார்.


ஹமாஸ் தாக்குதல் குறித்து ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் தலைவரான ஹசன் நஸ்ரல்லாஹ் முதல் முறையாக காணொளி வாயிலாக பேசியுள்ளார். எந்த இடத்தில் இருந்து நஸ்ரல்லாஹ் பேசினார் என்ற தகவல் வெளிவரவில்லை. இருப்பினும் அவர்தனது உரையில் கூறியிருப்பதாவது,


ஒக்டோபர் 7 தாக்குதல் ஹமாஸால் நடத்தப்பட்டது. அந்த முடிவு 100% பாலஸ்தீனத்தினுடையது. அந்த தாக்குதல் முழுக்க முழுக்க இரகசியமாக செய்யப்பட்டது.


ஒக்டோபர் 7 ஆம் திகதி நடவடிக்கையின் அற்புதமான வெற்றிக்கு முழுமையான இரகசியம்தான் காரணம். ஒபரேஷன் அல்-அக்ஸா ஃப்ளட் 100% பாலஸ்தீனம் எடுத்த முடிவு. அதை முழுமையாக செயல்படுத்தியதும் பாலஸ்தீனம்தான். அவர்கள் இந்த தாக்குதல் குறித்து யாரிடமும் சொல்லவில்லை. ஹமாஸ் எடுத்த முடிவு சரியானது, புத்திசாலித்தனமானது மற்றும் தைரியமானது, சரியான நேரத்தில் இதனை செய்துள்ளார்கள்.


ஹமாஸுக்கு எதிரான போரில் இஸ்ரேல் இப்போது காசாவில் செய்து வரும் மிகப் பெரிய தவறுகளில் ஒன்று, அதன் தொடர் தாக்குதல்கள்தான். ஒரு மாதம் முழுவதும் போர் செய்தும் இஸ்ரேல் ஒரு இராணுவ சாதனையை கூட செய்யவில்லை.


மேலும் ஹமாஸ் நடத்திய தாக்குதலை போல் இஸ்ரேல் இராணுவம் எந்த ஒரு சாதனையையும் இதுவரை செய்யவில்லை என்றும் சீண்டியுள்ளார் நஸ்ரல்லாஹ்.


நஸ்ரல்லாஹ்வின் இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பெய்ரூட்டில் உள்ள சதுக்கத்தில் நஸ்ரல்லாஹ்வின் பேச்சு ஒளிபரப்பப்பட்டது. அப்போது அதனை பார்த்த ஆதரவாளர்கள் துப்பாக்கியால் சுட்டு கொண்டாடினர்.  

No comments

Powered by Blogger.