Header Ads



துயரமான சாதனையை படைத்துள்ள இலங்கை



இலங்கையில் 23 சதவீதமானோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை உட்சுரப்பியல் நிபுணர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.


நீரிழிவு நோய் ஆபத்தில் உள்ள நாடுகளில் உலகின் முதல் 10 நாடுகளுக்குள் இலங்கை உள்ளதாக அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் நீரிழிவு நோய்த் தொடர்பில், கருத்து தெரிவித்த கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறை பேராசிரியர் வைத்தியர் பிரசாத் கட்டுலந்த, நீரிழிவு நோய் காரணமாக இலங்கையில் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.