ஐனாசாக்களை புதைக்க, கைகளால் குழிதோண்ட வேண்டிய கட்டாயத்தில் பலஸ்தீனியர்கள்
அல்-ஷிஃபா மருத்துவமனையில் இருந்து பேசிய காசாவின் சுகாதார அமைச்சின் இயக்குனர் மோனிர் அல்-பஷ்ர், மருத்துவமனை வளாகத்திற்குள் உடல்களை புதைப்பதற்காக பாலஸ்தீனியர்கள் தங்கள் கைகளால் தோண்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்று கூறுகிறார்.
“புதைகுழியைத் தோண்டுவதற்கு எங்களிடம் எந்த உபகரணங்களும் இயந்திரங்களும் இல்லை. இந்த உடல்களை நாம் புதைக்க வேண்டும் இல்லையெனில் தொற்றுநோய்கள் வெடிக்கும்.
இந்த உடல்கள் பல நாட்களாக தெருவில் கிடக்கின்றன, ”என்று அவர் அல் ஜசீராவிடம் கூறினார்.

Post a Comment