அரபு நாட்டு அதிபர்களே...!
அன்புள்ள மன்னர்களே,
அகதியின் ஓர் கடிதம் -நான்
உணவுக்காய் எழுதவில்லை- உங்கள்
உணர்வுக்காய் எழுதுகிறேன்.
டொலர் டொலர் ஆக நீர் உழைக்க
பரல் பரல் ஆக எண்ணை கொடுப்பீர்.
டொலர் டொலர் ஆக நீர் உழைக்க
பரல் பரல் ஆக எண்ணை கொடுப்பீர்
எண்ணை எடுப்பவன்
என்னைக் கொல்கிறான்
என்ணிப் பாருங்கள்
எங்கள் நிலைமையை.
கொடுக்கும் எண்ணையைக்
கொஞ்சம் நிறுத்தினால்
கெடுக்கும் கொடியவன்
அடங்கிப் போகலாம்
தினம் தினம் தோறும் பல உயிர்கள்
பிணம் பிணம் ஆக விழுகிறதே
தினம் தினம் தோறும் பல உயிர்கள்
பிணம் பிணம் ஆக விழுகிறதே
உங்கள் ஆட்சிக்கு தெரியவில்லையா?
எங்கள் துன்பங்கள் புரியவில்லையா?
சின்னக் குழந்தைகள் சிதறி இறக்குதே..
இன்னும் எதுக்குடா இஸ்ரேல் உறவுகள்?
Mohamed Nizous

Post a Comment