ஜோர்தானில் இலங்கையர்களுக்கு நிகழ்ந்துள்ள பரிதாபம்
விசா காலம் நிறைவடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கை இளைஞர், யுவதிகள் ஜோர்தானின் ஆடைத்தொழிற்சாலையொன்றில் பலவந்தமாக தொழில் புரிய நிர்பந்திக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இவர்கள் தொடர்பில் தற்போது அந்நாட்டு தூதரகம் ஊடாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சினையை விரைவில் நிவர்த்தி செய்து, பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான வசதிகளை வழங்கத் தேவையான ஏற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Post a Comment