Header Ads



ரயில் - பஸ் மோதல், பாரிய உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது


இன்று -29- காலை வஸ்கடுவ பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்கும் போது சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பேரூந்தொன்று புகையிரதத்துடன் மோதியதில் இருவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.


கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேரூந்தே விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். 


அளுத்கமவில் இருந்து சிலாபத்தை நோக்கி பயணித்த பவர் செட் புகையிரதமே இவ்விபத்திற்கு முகங்கொடுத்துள்ளது.

No comments

Powered by Blogger.