காத்தான்குடி மீரா பாலிகா பழைய மாணவிகளினால் E LIBRRARY திறப்பு
- ரீ.எல்.ஜவ்பர்கான் -
கல்வி அமைச்சின் அனுசரணையுடன் கிழக்கு மாகாணத்தில் பிரபல மகளிர் கல்லூரியான காத்தான்குடி மீராபாலிகா மகளிர் கல்லூரி தேசிய பாடசாலையில் இன்று E - Library திறந்து வைக்கப்பட்டது.
பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் 1993 மாணவ அணியின் ஒரு பிரிவினர்,மற்றும் நலன் விரும்பி ஒருவர் மற்றும் பாடசாலையின் பங்களிப்புடன் இத் திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது.
கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் யூ.எல்.மன்சூர் தலைமையில் இடம்பெற்ற இந்நூலகத் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம். அமீர் கலந்து கொண்டதுடன் கெளரவ அதிதியாக கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏஜீஏ.ஹக்கீம் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.



Post a Comment