Header Ads



அல் ஜசீரா ஊடகவியலாளரின் குடும்பதை கொன்றது இஸ்ரேல்


காஸாவிலுள்ள அல் ஜசீரா அரபியின் பணியகத் தலைவரான Wael Dahdouh இன் மனைவி, மகன், மகள் மற்றும் பேரன் ஆகியோர் இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.


அல் ஜசீராவில் ஒளிபரப்பப்பட்ட காட்சிகள், தஹ்தூஹ், டெய்ர் எல்-பலாவில் உள்ள அல்-அக்ஸா தியாகிகள் மருத்துவமனையில் புதன்கிழமை நுழைந்து அவரது இறந்த மனைவி, மகன் மற்றும் மகளை சவக்கிடங்கில் பார்ப்பதைக் காட்டியது.


அவர் தனது 15 வயது மகன் மஹ்மூத்தின் முகத்தை குனிந்து தொட்டு காட்டினார்.


நுசிராத் அகதிகள் முகாம் மீதான தாக்குதலுக்குப் பிறகு அவரது இரத்தம் தோய்ந்த முகத்தைப் பார்த்தபோது, ​​அவர் தனது ஏழு வயது மகள் ஷாமின் மூடிய உடலைப் பிடித்துக் கொண்டு அவளிடம் பேசுவது போல் இருந்தது.





No comments

Powered by Blogger.