பாகிஸ்தான் வீரரிடமிருந்து, இந்திய வீரருக்கு பரிசு
பாகிஸ்தான் பந்துவீச்சாளரான ஷாஹீன் அஃப்ரிடி இந்திய பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரிட் பும்ராவிற்கு பரிசு ஒன்றை வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்திய பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரிட் பும்ரா, தந்தையான செய்தி அறிந்து வாழ்த்து தெரிவித்து இந்த பரிசை வழங்கியுள்ளார்.
காலம்காலமாக இந்திய- பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையில் பல முரண்பாடுகள் இருந்தாலும் விளையாட்டின்போது, சக வீரர்கள் அவற்றை பொருட்படுத்தாமல் இதுபோன்று ஒற்றுமையாக செயற்படுவது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
Post a Comment