அஷ்கர் கமால்டீனுடைய ஜனாசா பொலிஸ் மரியாதையுடன் நல்லடக்கம்
பொலிஸ் திணைக்களத்தில் பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்ற அஷ்கர் கமால்டீன் அவர்களது ஜனாசா வத்தளையிலிருந்து கொழும்பு 7 ஜாவத்தை பள்ளிவாசலுக்கு கொண்டுவரப்பட்டது.
ஜாவததை பள்ளிவாசலில் அன்னருக்கான இறுதி மரியாதையை உயர் பொலிஸ் அதிகாரிகளினால் செலுத்தப்பட்டு ஜனாசாவை அவரது குடும்பத்தினரின் கையளித்தனர் அதன் பின்னர் . நேற்று 05 மஹ்ரிப் தொழுகையின் பின்னர் ஜாவத்தை முஸ்லிம் மய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந் நிகழ்வில் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், மற்றும் பொலிஸ் அதிகாரிகள் ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரிகளும் பேன்வாத்தியக் குழுவினர்களும் கலந்து கொண்டு இறுதிமரியாதையைச் செலுத்தினார்கள்.
-(அஷ்ரப் ஏ சமத்)
Post a Comment