Header Ads



"எல்லாமே வித்தியாசமாக தெரிவதை, நீங்களே பார்க்கலாம்"


சனல் 4 ஊடகம் ஏனைய உண்மைகளையும் வெளிப்படுத்தியுள்ளதால் இது தொடர்பில் சர்வதேச விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,


ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமானவர் என பல்வேறு தரப்பினரால் 04 வருடங்களாக நான் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானேன்.


மேலும் சனல் 4 ஊடகம் ஏனைய உண்மைகளையும் வெளிப்படுத்தியுள்ளதால், இது தொடர்பில் சர்வதேச விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டும்.


சனல் 4 பற்றிய அந்தக் கடிதத்தின் வேலைகள் இன்று நிறைவடையும். ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைப் பிரதிநிதி வந்துள்ளார். எனவே, ஐக்கிய நாடுகள் அமைப்பின் பரிந்துரைப்படி நாட்டில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று குரல் எழுப்பி வருகிறோம்.


பல்வேறு தரப்பினரால் 04 வருடங்களாக எனக்கு அனைத்து இன்னல்களையும் கொடுத்தார்கள். இப்போது நீங்கள் சனல் 4 ஐப் பார்க்கும்போது, ​​எல்லாமே வித்தியாசமாக தெரிவுதை நீங்களே பார்க்கலாம் என தெரிவித்துள்ளார். 

1 comment:

  1. ​உயிர்த்த ஞாயிறு படுகொலையில்் மைதிரியும் நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 மில்லியன் கட்டுமாறு கட்டளையிட்டும் இன்னும் அந்த நட்டஈட்டைச் செலுத்தாது பம்மாத்து கதைகளை அளந்து கொண்டு பொதுமக்களை ஏமாற்ற முயற்சி செய்வது நன்றாகத் தெரிகிறது. யார் ஏமாறப் போகின்றார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

    ReplyDelete

Powered by Blogger.