இரவோடு இரவாக நீக்கப்பட்டார் தயாசிறி
இது தொடர்பான கடிதம் நேற்று (05) இரவு தமக்கு கிடைத்ததாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட்டுள்ள கடிதத்தில், எம்.பி., ஜயசேகரவிடம் இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், எனவே அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக செயற்பட முடியாது எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் ஜயசேகரவிற்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதன் அடிப்படையில் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தம்மை நீக்கி கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கான கடிதம் தமக்கு கிடைத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக அக்கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் சரத் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரணிலுடன் ஒட்டுவதற்குத் தடையாக அமைந்த நபரை வௌியேற்றிவிட்டு இனி பச்சையும் நீலமும் ஒன்று சேர்ந்தால் ஈஸ்டர் ஞாயிறு படுகொலைக்கு மற்றொரு நாடகத்தை அரங்கேற்ற இருவரும் கடுமையாக உழைப்பார்கள்.
ReplyDelete