Header Ads



விலையை உயர்த்தியது லிட்ரோ (முழு விபரம் இணைப்பு)


12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் ரூபாய் 145 இனால்  அதிகரிக்கப்பட்டுள்ளது.


அதற்கேற்ப லிட்ரோ  12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் திருத்தப்பட்ட விலை ரூ. 3,127 ஆகும். 5 கிலோகிராம்  எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 58 இனாலும் 2.3 கிலோகிராம்  எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 26 இனாலும் உயர்த்தப்பட்டுள்ளது.


எனவே அவற்றின் திருத்தப்பட்ட விலைகள் முறையே ரூ. 1,256 மற்றும் ரூ. 587 ஆகும்.


சர்வதேச சந்தையில் ஒரு மெட்ரிக் தொன் எரிவாயுவிற்கு 100 அமெரிக்க டொலர்கள் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அதற்கேற்பவே லிட்ரோவின் எரிவாயு விலைகள் திருத்தப்பட்டுள்ளதாகவும் லிட்ரோ லங்கா நிறுவனத் தலைவர் முதித்த பீரிஸ் சுட்டிக்காட்டினார்.


No comments

Powered by Blogger.