பெர்சிக்கு 5 மில்லியன் ரூபா கையளிப்பு
கிரிக்கெட் களத்தில் இலங்கையின் புகழ்பெற்ற சியர்லீடர் பெர்சி அபேசேகரவுக்கு இலங்கை கிரிக்கெட் சார்பில் 5 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது.
அபேசேகரவின் நல்வாழ்வு மற்றும் நல்ல ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த நன்கொடை அவருக்கு வழங்கப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழு இந்த முடிவை எடுத்துள்ளது.
“சியர் லீடராக இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டிற்கு பெர்சியின் பங்களிப்பு அளவிட முடியாதது, மேலும் அவர் வீரர்களுக்கும் ஒட்டுமொத்த விளையாட்டுக்கும் பலம் தரும் கோபுரமாக இருந்துள்ளார், மேலும் அவரது நல்வாழ்வைக் கவனித்துக் கொள்வது எங்களின் முறை. ,” என இலங்கை கிரிக்கெட்டின் செயலாளர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் சார்பாக இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் மொஹான் டி சில்வாவினால் இந்த நன்கொடை வழங்கப்பட்டது.

Post a Comment