3 லட்சம் ரூபாவுடன் தப்பித்த ஞானசாரர்
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் பலவந்தமாக பிரவேசித்தமை தொடர்பான வழக்கில், மனுதாரர் தரப்புக்கு 3 லட்சம் ரூபாவை நஷ்ட ஈடாக செலுத்துமாறு, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட தரப்பினருக்கு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி வட்டரெக்க விஜித தேரர் ஊடக சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.
இந்த ஊடக சந்திப்பின்போது, சட்டவிரோதமாக நுழைந்து அழுத்தம் பிரயோகித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் ஞானசார தேரர் உள்ளிட்ட தரப்பினர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு கொழும்பு கோட்டை நீதிவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, திறந்த நீதிமன்றில் இந்த தண்டனை விதிக்கப்பட்டது.
Post a Comment