Header Ads



உமர் (ரழி) வாழ்வில் நிகழ்ந்த சம்பவமும், இன்று மக்காவில் நடந்த நிகழ்வும் (வீடியோ)


மக்கா - மஸ்ஜித்துல் ஹரம் பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகையில் இன்று 11-08-2023 நடந்த சம்பவம் இதுதான்


https://fb.watch/mmjBpPxzwj/

இன்றைய மக்கா ஹரம்ஷரீபில் ஜுமுஆ தொழுகை நடத்திய ஷைக் மாஹிர் முஹைகிலி  உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டதின் காரணமாக பாதிஹாசூராவில் இஹ்தினாஸ்ஸிராத்த் என்று ஓத ஆரம்பித்த பொழுது மயங்கிவிட்டார்கள். 


உடனடியாக முன்வரிசையில் இருந்த ஷைக் அப்துர்ரஹ்மான் அஸ்ஸுதைஸ் ஹபிழஹுல்லாஹ் இமாம் நிற்குமிடத்திற்குச் சென்று ஷைக் மாஹிர் தொடங்கிய வசனத்திலிருந்து தொடங்கி தொழுகையை பூர்த்தி செய்தார்கள். இது போன்று ஒரு இமாம் தொழுகை நடத்தும் போது, அவருக்கு ஏதேனும் தடங்கள் ஏற்பட்டால் தொழுகையை இடை நிறுத்தாமல் உடனடியாக அவருக்குப்பின் நிற்பவர் அவருடைய இடத்தில் நின்று தொழுகையை நடத்த வேண்டும்


இதற்கு  الاستخلاف في الصلاة என்று சொல்வார்கள்.


வரலாற்றில் இது போன்ற ஒரு நிகழ்வு நடந்துள்ளது


அமீருல் மூஃமினீன் உமர் (ரழி) அவர்கள் இமாமாக நின்று தொழுகை நடத்தும் போது கத்தியால் குத்தப் பட்டார்கள். 


அவர்கள் மயக்கம் வரும் நிலையிலும் தன் இடத்திலிருந்து பின் வாங்கி அவர்களுக்குப் பின்னால் நின்றிருந்த நபித்தோழர் அப்துர்ரஹ்மான்  பின் அவ்ப் (ரழி) அவர்களின் கையைப்பிடித்து தான் நின்றிருந்த இடத்தில் நிறுத்தினார்.  இப்னு அவ்ப்(ரழி) அவர்கள் தொழுகையைப் பூர்த்தி செய்தார்கள்


(புகாரி 3700)

No comments

Powered by Blogger.