Header Ads



இலங்கையை முன்மாதிரியாக கொள்க - ஐ.நா.


அண்மைக் காலத்தில் பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்த உலகின் 20 நாடுகளில் விரைவில் மீண்டு வந்த நாடான இலங்கையை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்த ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் அன்ட்ரே பிரான்சே, கடந்த வருடத்தில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தை பாராட்டினார்.


ஐக்கிய நாடுகள் சபையின் ஸ்தாபக உறுப்பு நாடான இலங்கையின் அனைத்து செயற்பாடுகளுக்கும் அதிகபட்ச ஆதரவு வழங்கப்படும் என்றும் ஐ.நா பொதுச்செயலாளரும் இதே கருத்தைக் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.