Header Ads



கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிக்கல்


கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் குழந்தைகளுக்கான இதயதினுள் வடிகுழாய் உட்செலுத்தும் சிகிச்சை பிரிவின் வைத்திய நிபுணர் இல்லாத காரணத்தினால் சிறுவர்களை விசேட சிகிச்சைக்காக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


போதிய சத்திரசிகிச்சை அறை வசதிகள் மற்றும் அதிதீவிர சிகிச்சை வசதிகள் இல்லாத காரணத்தினால் இதய சத்திரசிகிச்சைக்கான நீண்ட காத்திருப்பு பட்டியல் உருவாகியுள்ளதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.


அதேநேரம் குழந்தைகளுக்கான இதயதினுள் வடிகுழாய் உட்செலுத்தும் சிகிச்சை பிரிவில் பணியாற்றிய மருத்துவ நிபுணர்கள்  இருவரும் சேவையில் இருந்து விலகியுள்ளதாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் எச்.டி.யு.ரங்க குறிப்பிட்டுள்ளார்.


எனவே கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் இருந்து சிகிச்சைக்காக வரும் சிறுவர்கள் விசேட சிகிச்சைக்காக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு  அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.