Header Ads



மருந்து ஒவ்வாமையினால் மற்றுமொரு நோயாளி மரணமடைவு


மருந்து ஒவ்வாமை காரணமாக கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.


கடந்த 6ஆம் திகதி காயத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபரே இவ்வாறு உயிரிழந்தார்.


வழங்கப்பட்ட நோய் எதிர்ப்பு மருந்தினால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக நோயாளி உயிரிழந்துள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.


சம்பவத்தின் பின்னர் குறித்த நோய் எதிர்ப்பு மருந்தின் பயன்பாடு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.


சர்ச்சைக்குரிய மருந்து ஒவ்வாமை சம்பவங்கள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் முடிவுகளின்படி, இரண்டு நோயாளிகளே ஒவ்வாமை காரணமாக உயிரிழந்துள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்திம ஜீவந்த தெரிவித்துள்ளார்.




No comments

Powered by Blogger.