Header Ads



பெண்களை மயக்கி, நகைகளை திருடும் கும்பல்


- ரஞ்சித் ராஜபக்ஷ -


பெண்களை மயக்கமடையச் செய்து. அப்பெண்களின் நகைகளை கொள்ளையடிக்கும் திட்டமிட்ட திருடர்கள் கும்பலை ஹட்டன் பொலிஸ் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் (19) கைது செய்துள்ளனர்.


ஹட்டன் நகரிலுள்ள விழா மண்டபமொன்றில் கடந்த (12) ஆம் திகதி இடம்பெற்ற  விழாவிற்கு வந்திருந்த பெண்ணுடன் நட்புறவை ஏற்படுத்திக் கொண்ட மற்றுமொரு பெண், அந்த நிகழ்வில் கலந்துகொண்ட மற்றுமொரு பெண், குறித்த பெண்ணை வீட்டுக்கு அழைத்துச் செல்வதாக தெரிவித்துள்ளார்.


இதனை நம்பி அப்பெண்ணும் முச்சக்கரவண்டியில் ஏறிக்கொண்டாள். இடையில் இரண்டு ஆண்களும் அந்த முச்சக்கரவண்டியில் ஏறிக்கொண்டனர்.


 


தண்ணீரை குடித்துவிட்டு பெண் மயங்கிய நிலையில் பெண்ணின் கழுத்தில் இருந்த  சுமார் 4  இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டரை பவுண் ​தங்க செயினை திருடிவிட்டு அப்பெண்ணை டிக்கோயா -சஞ்சிமலை வீதியிலுள்ள பஸ் தரிப்பிடத்தில் விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.


மயக்கமடைந்த பெண்ணை அவ்வீதியில் பயணித்த சிலர் டிக்கோயா-கிளங்கன் ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.  பெண் சுயநினைவு திரும்பியதையடுத்து   சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.


முறைப்பாட்டின் பிரகாரம், ஹட்டன் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிசிடிவி காட்சிகள் ஊடாக விசாரணைகளை ஆரம்பித்து முதலில் முச்சக்கரவண்டியைக் கைப்பற்றினர். அதன்பின்னர்,  மேலும் இரு சந்தேக நபர்களையும் திருடுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரையும் கைதுசெய்துள்ளனர்.


சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதன் பின்னர், சந்தேகநபர்களிடம் இருந்த திருடப்பட்ட 2 ½ பவுன் தங்க நகையும், 60,000  ரூபாய் பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.


கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் ஹட்டன் மற்றும் நாவலப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்தவர்கள், சந்தேக நபர் வட்டவளை பொலிஸ் பிரிவில் வசிப்பவர் மற்றும் சந்தேக நபர்கள் 27-45 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் இவர்கள் பல திருட்டு சம்பவங்களில் பல பொலிஸ் நிலையங்களால் தேடப்பட்டு வருகின்றனர்.


கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும், இத்திருட்டுச் சம்பவம் தொடர்பில் ஏனைய சந்தேகநபர்களும் கைது செய்யப்படவுள்ளதாக ஹட்டன் பொலிஸ் தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் ரஞ்சித் ஜயசேன தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.