Header Ads



சிங்கப்பூர் ஜனாதிபதியுடன் ரணில் சந்திப்பு


சிங்கப்பூருக்கான இருநாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலீமா யகோப் (Halimah Yacob) ஆகியோருக்கிடையிலான சந்திபொன்று இன்று (21) இடம்பெற்றது.


சிங்கப்பூர் இஸ்தான மாளிகைக்கு சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு சிங்கப்பூர் ஜனாதிபதியினால் அன்பான வரவேற்பளிக்கப்பட்டதோடு, சுமூகமான கலந்துரையாடியதன் பின்னர் இருநாட்டு தலைவர்களும் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.  


சிங்கப்பூர் மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால இருதரப்பு தொடர்புகளை பலப்படுத்திக்கொண்டு, முன்னோக்கிச் செல்வது தொடர்பில் இரு நாட்டு தலைவர்களும் கலந்தாலோசித்ததோடு, உணவுப் பாதுகாப்பு, மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உள்ளிட்ட துறைசார் ஒத்துழைப்புக்களைப் பலப்படுத்திக்கொள்வது தொடர்பிலும் ஆராயப்பட்டது.  


அதனையடுத்து சிங்கப்பூர் ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில்,  


“எமது நட்புறவானது மனிதர்களின் அடிப்படையிலேயே வலுவாக நிலைத்து நிற்கும். 


அந்த தொடர்புகளை மேலும் பலப்படுத்திக்கொள்வதற்கான பரந்த வாய்ப்புகள் காணப்படுகின்றன. இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சிங்கப்பூர் சுற்றுப்பயணம் பலன்மிக்கதாகவும் வெற்றிகரமானதாகவும் அமையட்டும்" என பதிவிட்டிருந்தார்.  


ஜனாதிபதி ஊடகப் பிரிவு

21.08.2023

No comments

Powered by Blogger.