Header Ads



தேவை ஏற்பட்டால் துப்பாக்கிச் சூடு நடத்துமாறு அறிவுறுத்தல்


 நாட்டில் தேவை ஏற்பட்டால் துப்பாக்கிச் சூடு நடத்துமாறு பாதுகாப்பு படையினருக்கு, பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.


பாதாள உலகக் குழுவினரை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


மேலும் கருத்து தெரிவித்த அவர்,


போதைப் பொருள் குற்றச் செயல்கள் மற்றும் பாதாள உலகக் குழு செயற்பாடுகளை கட்படுத்த பொலிஸாரும், படையினரும் இணைந்து செயற்பட்டு வருகின்றனர்.


இந்நிலையில் பாதாள உலகக் குழுக்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையானது அரசியல் தலையீடுகள் இல்லாத வகையில் மேற்கொள்ளப்படு வருகிறது.


ஒரே வருடத்தில் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு வழங்கப்பட முடியாது. எனினும் நாட்டில் சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டுவதற்கு பொலிஸாருக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.


தென் மாகாணத்தில் பாதாள உலகக் குழு செயற்பாடுகள் அதகிரித்துள்ளது. இந்த குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் படையினர் இணைந்து செயற்பட்டு வருகின்றனர்.


மேலும், மக்களின் வாழ்க்கைக்கு குந்தகம் ஏற்படுத்தக் கூடிய செயற்பாடுகளை பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் என்ற வகையில் ஒருப்போதும், ஏற்றுக்கொள்ள முடியாது.” என அவர் தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.