Header Ads



நடுவீதியில் கிடந்த சடலம்


பதுளை - மஹியங்கனை வீதியில் கந்தகெட்டிய, எவெந்தாவ பகுதியில் உள்ள வீதியில் இன்று (12) காலை சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.


உயிரிழந்தவர் பதுலுஓயா, எவெந்தாவ பகுதியை சேர்ந்த திஸாநாயக்க முதியன்சலாகே நந்தன குமார என்ற  26 வயதுடைய இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


இறந்தவரின் தலையில் காயங்கள் இருந்ததாகவும் ​பொலிஸார் தெரிவித்தனர்.


காட்டு யானையின் தாக்குதலினால் இந்த மரணம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற நிலையில், இந்த மரணம் எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

No comments

Powered by Blogger.