Header Ads



முறைப்பாடு செய்த ஓய்வுபெற்ற, ஆசிரியை மீது அசிட் வீச்சு


நிதி மோசடி சம்பவம் தொடர்பில் பொதுச் சேவை ஆணைக்குழு மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளரிடம் முறைப்பாடு செய்த ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவர் மீது அசிட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இந்தச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஆசிரியை பொலிஸ் மா அதிபர் மற்றும் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.


தலைக்கவசத்தால் முகத்தை மறைத்த நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் தனது வீட்டுக்கு வந்து தனது முகத்தில் அசிட் வீசி தாக்குதல் நடத்தியதாக அவர் கூறியுள்ளார்,


பாதிக்கப்பட்ட ஆசிரியை இது தொடர்பில் பொலிஸ் அத்தியட்சகரிடம் ஏற்கனவே முறைப்பாடு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.


தலாத்துஓயா பிரதேச செயலகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பிலேயே ஆசிரியை முறைப்பாடு செய்துள்ளார்.

No comments

Powered by Blogger.