ஜனாதிபதிக்கு கம்மன்பில எச்சரிக்கை, பொன்னம்பலத்தையும் விரட்டியடித்தே தீருவோம்
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கோரிக்கைக்கு அடிபணிந்து பொலிஸாரையும், படையினரையும் அவரின் வீட்டுக்கு முன்பாக குவித்து அவரை பாதுகாக்கின்றார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதற்கு தகுதியற்றவர் என்றும், அவருக்கு பாதுகாப்பு வழங்குவதை ஜனாதிபதி உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் உதய கம்மன்பில எம்.பி. வலியுறுத்தினார்.
இல்லையேல் ஜனாதிபதி ரணிலின் வீட்டை முற்றுகையிடவும் தாம் தயங்கமாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள பௌத்த மக்களுக்கு எதிராகவும், நாட்டுக்கு எதிராகவும் செயற்படும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு விரட்டியடித்தே தீருவோம் என்றும் அவர் சூளுரைத்துள்ளார்.
Post a Comment