Header Ads



தமிழ் அரசியல்வாதிகளுக்கு எல்லாம் நான் அஞ்சப் போவதில்லை - இலங்கை பௌத்த நாடு



இலங்கையில் விகாரைகளையும் தூபிகளையும் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் தமிழர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டுமென முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.


கொழும்பில் இன்று (15) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,


நீதிமன்றில் எனக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப் போவதாக தமிழ் அரசியல்வாதிகள் கூறுவது குறித்து ஒருபோதும் நான் அஞ்சப்போவதில்லை.


இலங்கை ஒரு பௌத்த நாடு என்பதை யாரும் மறந்து விடக்கூடாது.இலங்கை சிங்களவர்களுடைய நாடு. தமிழர்களுடையது அல்ல.


பௌத்த மதத்தை விசுவாசிப்பவன் என்ற வகையில் நான் ஒன்றைக் கூற விரும்புகிறேன்.


''உங்களுக்கு பிடித்தால் எங்களுடன் பயணியுங்கள்.எமக்கு வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என வேறுபாடுகள் கிடையாது.


இலங்கையில் வாழும் தமிழ், சிங்கள, முஸ்லீம் உள்ளிட்ட அனைவருக்கும் விகாரைகளை அமைக்கவும் கோவில்களை அமைக்கவும் உரிமையுண்டு. இதற்காக நாம் தமிழர்களிடம் அனுமதி கோர வேண்டுமா? நாம் தூபிகளை அமைக்க யாரிடம் அனுமதி கோர வேண்டும்?


இலங்கை பெண்கள் எமது முன்னோர்களுக்கு அழகாக தெரியவில்லை. இதனால் அவர்கள் இந்தியாவில் இருந்து பெண்களை இங்கு கூட்டிக் கொண்டு வந்தார்கள். குறித்த பெண்களுடன் இலங்கைக்கு வந்த பிரிவினர் அவர்களுக்காக கோவில்களை அமைத்துக் கொண்டார்கள். இதனை நாம் எதிர்க்கவில்லை.



எமது உறவினர்களும் கோவில்களுக்கு செல்கிறாரர்கள். கோவில்கள், விகாரைகள், பள்ளிவாசல்கள் உள்ளிட்ட அனைத்து மதத்தலங்களையும் மதிக்க வேண்டும்.


அனைத்து மதத்தவரும் எமது உறவினர்கள். அனைவருக்கும் எமது நாட்டை குறித்து கருத்து தெரிவிக்க முடியும்.


மலையக மக்கள் காரணமாகவே இன்று இலங்கையில் அந்நிய செலவாணி பாதுகாக்கப்படுகிறது.


நாட்டின் ஒரு பகுதியை தருமாறு கேட்க அவர்களுக்கு உரிமையுள்ளது. அதனை நான் எதிர்க்க மாட்டேன். எனினும், ஒவ்வொரு தரப்பினரும் இவ்வாறு கேட்கும் பட்சத்தில் அதற்கான நடவடிக்கையாக இலங்கையை பிரிக்க முடியாது.


சிங்களவர்களாக இலங்கையர்களாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த நடவடிக்கையை எதிர்க்க வேண்டும்.


இலங்கையை பிரிக்க முயற்சிப்பவர்களின் தலையை எடுப்பதாக கூற ஒருபோதும் நான் பயப்படப்போவதில்லை. இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தாலும் அதனை எகிர்கொள்ளத் தயாராகவே உள்ளேன். இதனை தமிழ் அரசியல்வாதிகள் நன்கு நினைவில் வைத்துச் செயற்பட வேண்டும்.'' என மேலும் தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.