Header Ads



கற்பிட்டிக்கு வந்த அரியவகை திமிங்கலம்


புத்தளம் மாவட்டம், கற்பிட்டி இப்பந்தீவு பகுதியில் 30 அடி நீளம் உடைய திமிங்கலம் ஒன்று இன்றைய தினம் (08-08-2023) உயிருடன் கரையொதுங்கியுள்ளது.


இதேவேளை, உயிருடன் கரையொதிங்கிய திமிங்களத்தைக் கண்ட மீனவர்கள் கற்பிட்டி வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்குத் தகவலை வழங்கியுள்ளனர்.


தகவலறிந்து விரைந்து வந்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கற்பிட்டி விஜய கடற்படையினரின் உதவியுடன் திமிங்களத்தை ஆழமான பகுதியில் விடுவிக்கப்பட்டதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.  


இந்த திமிங்கலம் Bryce's Whale இனத்தைச் சார்ந்தது என கற்பிட்டி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.   

No comments

Powered by Blogger.