Header Ads



6 மாதங்களில் 600 விரிவுரையாளர்களும், 12 மாதங்களில் 274 விசேட நிபுணர்களும், 842 வைத்திய அதிகாரிகளும் வெளியேற்றம்


6 மாதங்களில் 600-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.


தற்போது அரச பல்கலைக்கழக கட்டமைப்பில் சுமார் 6000 வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கங்களின் சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.


பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதால், அரச பல்கலைக்கழக முறைமையும் படிப்படியாக நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது.


இதேவேளை, இந்த வருடம் மே மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த ஒரு வருட காலப்பகுதியில், 274 விசேட வைத்திய நிபுணர்கள் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.


இந்த காலப்பகுதியில் 842 வைத்திய அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.