Header Ads



58,766 ஏக்கர் பயிர் நிலங்கள் சேதம் - 6 வகை பயிர்களுக்கு மாத்திரமே நட்டஈடு என்கிறார் அமைச்சர்


58,766 ஏக்கர் பயிர் நிலங்கள் சேதம் - 6 வகை பயிர்களுக்கு மாத்திரமே நட்டஈடு என்கிறார் அமைச்சர்


தற்போதைய வரட்சி காரணமாக நாடளாவிய ரீதியில் 58,766 ஏக்கர் பயிர்ச்செய்கை நிலங்கள் சேதமடைந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.


எவ்வாறாயினும், அரிசி, சோளம், மிளகாய், உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் சோயா போஞ்சி போன்ற பயிர்களுக்கு மாத்திரமே நட்டஈடு வழங்க முடியும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று (29) தெரிவித்துள்ளார்.


ஏனைய பயிர்ச் சேதங்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்க முடியுமாயின் அதனையும் சமாளிக்கத் தயார் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.