Header Ads



வாகனப் பிரயாணங்களில் கவனமாக இருங்கள் - 2 மரணச் சம்பவங்கள் கற்றுத்தரும் பாடம்


அண்மையில் நிகழ்ந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் அகப்பட்ட, இரண்டாவது இளைஞனும் இன்று எம்மை விட்டுப் பிரிந்து விட்டான். இருவரும் இணை பிரியா நண்பர்கள் என்று அறிய வந்தேன்.

நுஸைக் ஒரு குடும்ப உறவு போல் பழகியவன். எனது சகோதரரின் மகன்களின் உடன் பிறவாச் சகோதரனாகப் பழகியவன். 


இச்சம்பவத்துக்கு முன்னர் எனது மதினியின் மகளான, ஆசிரியை ராஷிதாவையும் மோட்டார் சைக்கிள் விபத்தில் நாங்கள் இழந்திருந்தோம். 


அந்தத் துயரம் மனதை விட்டு இன்னும் அகலா நிலையில், மனதை நடுங்க வைக்கும் அடுத்த விபத்தும் இரு இளைஞர்களின் மரணமும் நிகழ்ந்திருக்கிறது.


இப்போதைக்கு இளைஞர்களுக்குச் சொல்ல முடிந்ததெல்லாம், உங்களுக்கு உங்களுக்கென்று ஒரு குடும்பம் இருக்கிறது. பெற்றோரும் கூடப்பிறந்த உறவுகளும் நட்புகளும் சுற்றமும் இருக்கிறது. உங்கள் நலனில் அவர்களுக்கும் அக்கறை இருக்கிறது.


நீங்கள் உங்களது வாகனப் பிரயாணங்களில் கவனமாக இருங்கள்.


மறைந்த இரண்டு இளைஞர்களையும் எல்லாம் வல்ல இறைவன் பொருந்திக் கொள்ளட்டும். அவர்களது இழப்பால் வருந்தும் குடும்பத்தினருக்கு இறைவன் தாங்கும் பொறுமையை வழங்கட்டும்! ஆமீன்!


- Ashroff Shihabdeen -




No comments

Powered by Blogger.