15 எம்.பி.க்கள் ஆங்கிலப் பாடநெறிக்கு பதிவுசெய்த போதிலும், இறுதியில் 5 பேர் மாத்திரமே பயிற்சியை முடித்தனர்
தேசிய மொழிகள் மற்றும் பயிற்சி நிறுவனத்தில் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆங்கில கற்கைநெறியை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.
இவர்களுக்கு கற்கைநெறி வெற்றிகரமாக முடித்தமைக்கான சான்றிதழ்கள் தற்போது வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேசியப்பட்டியலில் தெரிவான எம்.பி ஒருவர், கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் எம்.பி., மற்றும் காலி, குருநாகல், மொனராகலை மாவட்டங்களைச் சேர்ந்த எம்.பி.க்களே இந்தப் பாடநெறியை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளனர்.
ஆரம்பத்தில் 15 எம்.பி.க்கள் ஆங்கிலப் பாடநெறியை கற்க பதிவுசெய்திருந்த போதிலும் இறுதியில் ஐந்து பேர் மாத்திரமே பயிற்சியை நிறைவுசெய்துள்ளனர்.
எம்.பி.க்களின் வசதிக்காக பாராளுமன்ற அமர்வு நாட்களில் கற்பித்தல் நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளதுடன், எம்.பி.க்கள் தவிர, 42 பாராளுமன்ற ஊழியர்களும் ஆங்கில மொழி பாடத்தை கற்றுள்ளனர்.
Post a Comment