Header Ads



பாடசாலை மாணவர்களுக்கு மிகப்பெரும் அபாயம்


பாடசாலை அமைப்பில் கையடக்க தொலைபேசிகள் உள்ளிட்ட பிற தொழில்நுட்ப கருவிகளின் அதிகப்படியான பயன்பாடு காரணமாக, மாணவர்கள் செயன்முறை கல்வியில் இருந்து விலகும் அபாயம் காணப்படுவதாக   மனநல மருத்துவ நிபுணர்  ரூமி ரூபன் தெரிவித்துள்ளார்.


கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 


அடிமையாதல் மற்றும் மாணவர்களின் மனநலம் பாதிக்கப்படுதை கருத்தில் கொண்டே பாடசாலைகளில் கையடக்கத் தொலைபேசி பாவனையை தடை செய்ய வேண்டும் என யுனெஸ்கோ அமைப்பு பரிந்துரைத்துள்ளதாக வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.


ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்த யுனெஸ்கோ, பாடசாலைகளின் கையடக்க தொலைபேசியை பயன்படுத்துவதைத் தடைசெய்யுமாறு சிறப்பு அறிக்கையை சமீபத்தில் சமர்ப்பித்துள்ளது. கொவிட் தொற்று நோயின் பின்னர் பாடசாலைகளில் கைடயக்க தொலைபேசி பயன்பாடு மற்றும் பாடசாலை முடிந்ததும் அவற்றின் பயன்பாடு மற்றும் பல்வேறு வகையான டெப்கள் மற்றும் பிற டிஜிட்டல் சாதனங்களின் பயன்பாடு மாணவர்களிடையே அதிகரித்துள்ளது. மேலும் புத்தகம் படிக்கும் நேரமும் குறைவு. ஆசிரியர்களுடன் இருக்கும் நேரமும் குறைவு. ஒரு திரையில் தங்கள் வாழ்க்கையில் அதிக நேரத்தை செலவிடுவதால், அதற்கு அடிமையாகிவிடும் திறன் உள்ளது. இது குழந்தைகளின் மன ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது என்றார்.


No comments

Powered by Blogger.