Header Ads



தாயுள்ளத்தின் தூய அன்பின் முன் ஜாதியும், மதமும் விலகியே நிற்கும்


மலப்புறம் மாவட்டத்தில் ராமபுரம் ஊரில் இயங்கி வரும் மகளிர் சுய உதவிக்குழு கேண்டீனில் பணிபுரிபவர் சுமதி.


குறைந்த கட்டணத்தில் சுவையான உணவு கிடைப்பதால், சுற்று வட்டாரத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளில் பயில்பவர்கள் இங்கு வந்து உணவுண்ணும் அனைவரும் கேண்டீன் ஊழியர்களுக்கு பரிச்சயமானவர்கள்.


அப்படித்தான் இரண்டு தினங்கள் முன்பு அருகில் உள்ள பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர் முகமது பாசில் மதியம் சாப்பிட வந்தார். சமீபத்தில் நடைபெற்ற விபத்தில் காயமடைந்த பாசிலின் வலது கையில் அறுவை சிகிச்சை முடிந்து கட்டுடன் வந்திருந்தார்.


பாசில் முன் உணவுத்தட்டை கொண்டு சுமதி சேச்சி வைக்க பாசில் ஒரு ஸ்பூன் கேட்டு வாங்கினார்.


பாசில் இடது கையால் ஸ்பூனில் சாப்பிடுவதை பார்த்து வருத்தம் கொண்ட சுமதி சேச்சி பாசில் முன்பிருந்த பிளேட்டை கையில் எடுத்து சாதத்தை கறி ஊற்றி பிசைந்து தன் சொந்த மகனுக்கு ஊட்டுவது போல பசியாற்றியதை பார்த்த  சக மாணவர்கள்  இருவருக்கும் தெரியாமல் எடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வரவேற்பைப் பெற்றது.


தாயுள்ளத்தின் தூய அன்பின் முன் ஜாதியும் மதமும் விலகியே நிற்கும் என்பதை இந்த காட்சி பறைசாற்றியது.


Colachel Azheem

No comments

Powered by Blogger.