Header Ads



முஸ்லிம்களின் மனிதாபிமானச் செயல்


ஐந்து வருடங்கள் முன்பு ஒரு விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சைக்கு பிறகு இடுப்புக்கு கீழே செயலிழந்து வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அன்றாட செலவுகளுக்கு கூட பிறரை எதிர்பார்த்து நாட்களை கடத்தியவருக்கு ஒரு ஜும்மா வசூல் தொகை தன்னம்பிக்கை ஊட்டியது.


கோழிக்கோடு மாவட்டம் அத்தாணி பகுதியில் வசித்து வந்தவர் மணிகண்டன்.. 


இந்துக்கள் முஸ்லீம்கள் என்று இணைந்து வசிக்கும் அத்தாணி பகுதியில் எல்லோருக்கும் அறிமுகமான மணிகண்டன் ஐந்து வருடங்கள் முன்பு ஒரு விபத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டவர்.


அந்த ஊரில் சிறுசிறு வேலைகள் செய்து குடும்பத்தை கவனித்து வந்த மணிகண்டன் வீட்டிலேயே முடங்கியதால் குடும்பம் வறுமையில் வாடியது.. இது குறித்து தெரிந்து கொண்ட தாருஸ்ஸலாம் ஜமாஅத் நிர்வாகிகள் மணிகண்டனை சந்தித்து அவரது தேவைகளை கேட்டறிந்ததில், தனக்கு ஒரு எலெக்ட்ரிக் வீல் செயர் வாங்கி தந்தால் அதில் வெளியே சென்று ஏதாவது பொருட்கள் விற்பனை செய்து வருமானம் ஈட்ட முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்..


எலெக்ட்ரிக் வீல் செயர் விலை விசாரிக்க ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் ஆகும் என்று தெரிந்தது.


சில வாரங்களுக்கு முன் ஒரு ஜும்மா தினத்தில் தொழுகைக்கு பிறகு பேசிய இமாம், மணிகண்டன் விபரத்தை கூறி அவருக்கு வீல் செயர் வாங்கிட இன்றைய ஜும்ஆ வசூல் தொகை ஸதகா செய்வதாக அறிவித்தார்.


சாதாரணமாக ஐயாயிரம் ஆறாயிரம் ரூபாய் வசூலாகும் பக்கெட்டில் அன்றைய தினம் ஜமாஅத் மக்கள் தாராளமாக மனமுவந்து ஸதகா செய்ததில் ஜும்மா வசூல் மூலமே ஒரு லட்சம் ரூபாய் கிடைத்தது.


அடுத்த வாரமே பள்ளிவாசலுக்கு அழைத்து வரப்பட்டு ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகிகளால் மணிகண்டனுக்கு வழங்கப்பட்ட எலக்ட்ரிக் வீல் செயரில் மகிழ்ச்சியுடன் புறப்பட்டு சென்றார்.. 


Colachel Azheem

1 comment:

  1. கோழிக் கோடு அத்தாணி மாவட்ட மக்களுக்கு இந்த மனிதாபிமான செயலைச் செய்ய முடிந்தால் ஏன் அதே செயலை இலங்கை முஸ்லிம்களுக்குச் செய்ய முடியாது. மனநிலையில் நிச்சியம் மாற்றம் வரவேண்டும். எங்கோ யாரோ ஒருவர் வாழ்க்கையில் சிரமத்தை எதிர்நோக்குவது தெரிந்தால் அது யாராகவும் இருக்கலாம். அவருக்கு மனமுவந்து உதவ முன்வர வேண்டும். والله في عون العبد ماكان العبد في عون أخيه என்ற நபி(ஸல்) அவர்களின் நபிமொழியின் பொருள் அதுதான். அதாவது ஒரு அடியான் தனது சகோதரருக்கு உதவி செய்யும் காலமெல்லாம் அல்லாஹ் அந்த அடியானுடன் இருக்கின்றான். இங் கே அந்த அடியான் முஸ்லிமாக இருக்க வேண்டும் என்ற பொருள்படாது. இங்கு குறிபிப்பிடப்படுவது மனிதநேயம். யார் மனிதர்களுக்கு உதவி செய்கின்றார்களோ அல்லாஹ் அவர்களுடன் இருக்கின்றான். நாம் வாழ்வது நமக்காக அல்ல, பிறருக்காக நாம் வாழும் போது மாத்திரம் எமது வாழ்க்கைக்கு ஒரு வலிமையும் உறுதியும் கிடைக்கின்றது. உலகில் வாழ்ந்த மிகச் சிறந்த மனிதர்கள், நாட்டின் சேவைக்காகவும், மனிதர்களின் நல்வாழ்வுக்காகவும் உழைத்து அவர்கள் வாழ்க்கைகையைத் தியாகம் செய்திருக்கின்றார்கள். அவர்கள் தான் உண்மையில் மாமனிதர்கள். எனவே நாம் தனிப்பட்ட ரீதியிலும் சமூக மட்டத்திலும் தேவையுடையவர்களை இனங்கண்டு அவர்களுக்கு உதவ வழியமைப்போம். அல்லாஹ் எமது வாழ்க்கைக்கு நிச்சியம் மெருகூட்டுவான்.

    ReplyDelete

Powered by Blogger.