Header Ads



அதிசொகுசாக வாழும் கோட்டாபய, குழுக்களின் தலைவர்களாக ராஜபக்ஷாக்களின் கையாட்கள் நியமனம்


நாட்டை வங்குரோத்தடையச் செய்தவர்கள் தொடர்பில் ஆராய்வதற்கான குழுவின் தலைவர்களாகவும், உறுப்பினர்களாகவும் ராஜபக்ஷாக்களின் கையாட்களே நியமிக்கப்பட்டுள்ளனர். இது மிகவும் கேலிக்குரிய விடயமாகும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இது பற்றி அறிந்திருக்கின்றாரா இல்லையா என்று தெரியவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா கேள்வியெழுப்பியுள்ளார்.


கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்றைய தினம் (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


நாட்டை வங்குரோத்தடையச் செய்து , வறுமையிலுள்ள மக்களின் எண்ணிக்கையை 70 இலட்சமாக உயர்த்தி கடந்த ஆண்டு இந்த தினத்தில் பின் கதவால் தப்பிச் சென்ற கோட்டாபய ராஜபக்ஷ நூற்றுக்கும் மேற்பட்ட இராணுவ, பொலிஸ் உத்தியோகத்தர்களின் பாதுகாப்புடன் அதிசொகுசு வாழ்க்கையை  இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.


<
p style="text-align: justify;">நாட்டை வங்குரோத்தடையச் செய்தவர்கள் தொடர்பில் ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழுவில் முற்றுமுழுதாக ராஜபக்ஷக்களின் ஆதரவாளர்களே இருக்கின்றனர். பசில் ராஜபக்ஷவுக்கு மிக நெருங்கியவரும் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளருமான சாகர காரியவசம் இதன் தலைவராக இருப்பதை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்?


கலைக்கப்பட்டுள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கு மீண்டும் அதிகாரத்தை வழங்கி, ஜனநாயகத்தைக் கேள்விக்குறியாக்கும் வகையிலான பிரேணையை முன்வைக்க முயற்சித்த கெடகொட இக்குழுவின் பிரிதொரு உறுப்பினராவார். ஆளுங்கட்சியைச் சேர்ந்த 9 உறுப்பினர்கள் இதற்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இது கேலிக்குரிய விடயமாகும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இது புரியவில்லையா?


நாட்டில் ஓரளவு ஸ்திர நிலைமை ஏற்பட்டுள்ளதை ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் அது தற்காலிகமானதே. இதனை நிலையானதாக்குவதற்கு அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தப்பட வேண்டும் என்றார்.

No comments

Powered by Blogger.