Header Ads



மதம் கடந்து, மனிதாபிமானத்துடன் மனிதர்களுக்கு உதவுவோம்


மலப்புறம் மாவட்டத்தில் கோட்டக்கல் பரவூரில் நடந்த ஒரு சம்பவம் கேரள முஸ்லிம்களின் மனித நல்லிணக்கத்தின் மற்றொரு சான்றாக பாராட்டப்பட்டது.


முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் அந்த ஊரின் ஜும்மா மசூதி அருகில் வசிப்பவர் வேலாயுதம்.


உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேலாயுதம் மனைவி விஜயலட்சுமி வெள்ளிக்கிழமை மாலை மரணமடைய உடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது.


இஷா தொழுகைக்கு பின் வீட்டுக்கு புறப்பட்ட மசூதி இமாம் அப்துல் மஜீத் முஸ்லியார் வேலாயுதம் வீட்டில் ஆள் கூட்டம் இருப்பது பார்த்து விசாரிக்க விஜயலட்சுமி மரணித்த விபரம் தெரிந்தது.


வேலாயுதம் ஒரு சிறிய வீட்டில் வசிப்பதும், அவரது வீட்டில் வரும் உறவினர்கள் அமர்வதற்கு கூட இடமில்லை என்பதை தெரிந்து கொண்ட இமாம் மீண்டும் பள்ளிவாசல் திரும்பி ஜமாஅத் தலைவர், செயலாளருக்கு தகவல் தெரிவித்தார்.


ஜமாஅத் நிர்வாகிகள் கலந்து ஆலோசித்து மறுநாள் சனிக்கிழமை காலை மதரஸாவுக்கு விடுமுறை வழங்கவும், வேலாயுதம் வீட்டுக்கு தேவையான தண்ணீர் தேவைக்கு மசூதியிலிருந்து தண்ணீர் எடுத்துக்கொள்ளவும், வேலாயுதம் வீட்டுக்கு தொலைவில் இருந்து இரவில் வரும் உறவினர்கள் தங்கிக் கொள்ளவும், கழிப்பறைகளை பயன்படுத்தி கொள்ளவும் மதரஸா வகுப்பறைகளை திறந்து கொடுத்தனர்.


மறுநாள் தனது மனைவியின் அடக்கம் முடிந்து மாலையில் மசூதி இமாம் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து தான் கேட்காமலேயே குழந்தைகளுடன் வந்த தங்கள் குடும்பத்தின் பெண்கள் உட்பட இரவு தங்கிக் கொள்ள மசூதியின் ஒரு பகுதியை திறந்து தந்ததற்கு கண்ணீர் மல்க நன்றி கூறினார்.


Colachel Azheem

No comments

Powered by Blogger.