Header Ads



சுவீடனில் புனித குர்ஆன் எரிப்பு - அந்நாட்டு தூதுவரை அழைத்து கண்டித்த சவூதி அரேபியா


உலகில் பல இலட்சம்  முஸ்லிம்கள் ஹஜ்ஜுப்பெருநாளைக் கொண்டாடும் நிலையில் ஸ்வீடனில் உள்ள ஸ்டாக்ஹோம் மத்திய பள்ளிவாயிலுக்கு முன்னால் ஒரு தீவிரவாதி புனித குர்ஆன் பிரதியினை எரித்ததற்கு ஸவுதி அரேபியா தனது கண்டனத்தையும் அதிருப்தியையும் வெளியிட்டிருந்தது


அதனைத் தொடர்ந்து ஸவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சு   ஸ்வீடன் நாட்டின் தூதரை  அழைத்து, இந்த அவமானகரமான செயலை ஸவுதி அரேபியா திட்டவட்டமாக நிராகரிப்பதாகவும் கண்டிப்பதாகவும் அறிவித்தது. 


மேலும் சகிப்புத்தன்மை, மிதவாதம் மற்றும் தீவிரவாதத்தை நிராகரித்தல் போன்றவற்றுக்காக செய்யப்படும் சர்வதேச முயற்சிகளுக்கு நேரடியாக முரண்படும் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்துமாறும் ஸ்வீடன் அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்தது. 


மற்றும் மக்களுக்கும் நாடுகளுக்கும் இடையிலான உறவுகளுக்கு தேவையான பரஸ்பர மரியாதையைப் பலப்படுத்துமாறும் இவ்வாரான செயற்பாடுகள் மூலம் அதன் மதிப்பு குறைக்கப்பபுகிறது அல்லது நீத்துப் போகச் செய்யப்படுகிறது எனவும் ஸவுதி அரேபியா ஸ்வீடன் தூதுவரிடம் அறிவித்தது.

No comments

Powered by Blogger.