Header Ads



வவுனியாவில் கொடூரமாக தாக்கப்பட்ட இளைஞனும் மரணம் - இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை


வவுனியாவில் கும்பல் ஒன்றினால் கடுமையாக தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இளைஞன் இன்று -26- அதிகாலை உயிரிழந்துள்ளார்.


தோணிக்கல் பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த இனந்தெரியாத சிலர், வீட்டை எரித்ததோடு, அங்கிருந்தவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டனர்.


இந்தத் தாக்குதலில் ஏற்கனவே இளம் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், 9 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.


இந்நிலையில் எரிகாயங்களுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுகந்தன் என்பவர் இன்று காலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன 

No comments

Powered by Blogger.