Header Ads



பௌத்த விஹாரையில் யானை துன்புறுத்தப்பட்டு சொந்த நாட்டிற்கு சென்றமை வேதனை மிக்கது


முத்து ராஜா யானை திருப்பி தாய்லாந்திற்கு அனுப்பப்பட காரணம் சரியான தொழிற்பயிற்சிக் கல்வி இல்லாதது தான் என பஹியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார்.


ஒரு பௌத்த விஹாரையில் இருந்த யானை சரியாக கவனிக்கப்படாமல் துன்புறுத்தப்பட்டு மீண்டும் தனது சொந்த நாட்டிற்கு அனுப்பப்பட்டதைக் கேள்வியுற்று மிகவும் வேதனையாக இருந்தது என ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்தார்.


இலங்கை ஒரு பௌத்த மதக் கோட்பாடுகளைப் பின்பற்றுவதில் சிறந்து விளங்கும் நாடாகும். இருந்த போதும் அன்பளிப்பாகப் பெறப்பட்ட ஒரு யானையை முறையாக கவனிக்க முடியாமல் தோற்றுப் போயிருக்கின்றோம்.


நிலைமை குறித்து தொடர்ந்து பேசிய தேரர், முத்துராஜாவைத் அனுப்புவதில் முன்னின்று செயற்பட்டவர்களுக்கும் தாய்லாந்து அரசாங்கத்திற்கும் தனது நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்.


முறையான தொழிற்பயிற்சி இல்லாததால் இவ்வாறு பல யானைகள் துன்பப்படுகின்றன. பெரும் பணக்காரர்கள் மற்றும் நிலமே போன்றோரின் கவனிப்பிலுள்ள அல்லது வீடுகளிலிருக்கும் ஒரு சில யானைகள் மாத்திரமே சரியாக பராமரிக்கப்படுகின்றன. ஆனால் இவற்றில் பெரும்பாலான மிருகங்கள் துஷ்பிரயோகத்திற்குள்ளாகின்றன” என அவர் தெரிவித்தார்.


இந்த யானைகள் வருடத்தில் ஒருமுறை தான்  'பெரஹெர' விற்கு பாவிக்கப்படுகின்றன. மீதி நாட்களெல்லாம் விடுதிகள் அல்லது சுற்றுலாத் தலங்களில் தான் இருக்கின்றன. அந்நிய செலாவணியைப் பெறும் ஒரு வழிமுறையாகவே இந்த யானைகள் பயன்படுத்தப்படுகின்றன.


விஹாரைகளுக்கு யானைகளை வழங்குவதை நிறுத்த வேண்டும். ஜனாதிபதி இவ்விவகாரத்தில் தலையிட்டு மனிதர்களுக்கும் யானைககளுக்குமிடையிலான மோதல்களால் நாளாந்தம் யானைகள் உயிரிழப்பதை தடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


நாட்டில் உள்ள யானை வளத்தைப் பற்றி வனஜீவராசிகள் திணைக்களத்தின் அக்கறை காட்டுவதில்லையென அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.  


முத்துராஜா திருப்பியனுப்பப்பட்டதன் பின் சில செயற்பாட்டாளர் குழுக்கள் மற்றும் தாய்லாந்தின் பிரஜைகள் சிலர் முத்துராஜா யானையை மீண்டும் இலங்கைக்கு வழங்க வேண்டாம் என மேன்முறையீடு செய்துள்ளனர்.

No comments

Powered by Blogger.