Header Ads



"உலகிலேயே சுவிஸ் குடியுரிமை பெறுவதுதான் கடினமான விடயம்"


உலகிலேயே சுவிஸ் குடியுரிமை பெறுவதுதான் கடினமான விடயம் என்பது பலரும் அறிந்த உண்மை. எவ்வளவு காலமாக ஒருவர் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து வருகிறார், அவரது மொழித்திறமை எப்படி உள்ளது என்பது போன்ற விடயங்களுடன், ஒருவர் குற்றப் பின்னணி இல்லாமலிருப்பதும் சுவிஸ் குடியுரிமை பெறுவதற்கு அவசியம்.


சுவிஸ் குடியுரிமை பெறுவதற்கு பயங்கர குற்றங்கள் மட்டுமல்ல, சிறிய குற்றங்களும் தடையாகிவிடலாம். அவை என்னென்ன என்று பார்க்கலாம்.


சாலை விதிகளை மீறுதலும் கூட சுவிஸ் குடியுரிமை பெறுவதற்கு தடையாகிவிடலாம். சுவிட்சர்லாந்தில் வாழும் பிரான்ஸ் நாட்டவர் ஒருவருக்கு, அனுமதிக்கப்பட்ட வேகத்தைவிட அதிக வேகத்தில் வாகனம் ஓட்டியதற்காக சுவிஸ் குடியுரிமை மறுக்கப்பட்டது. இத்தனைக்கும் அவர் 40 ஆண்டுகளாக சுவிட்சர்லாந்தில் வாழும், பல கோடிக்கு வர்த்தகம் செய்யும் ஒரு கோடீஸ்வரர் என்பது குறிப்பிடத்தக்கது.



வாங்கிய கடனை திருப்பிக்கொடுக்காமல் இருப்பதும் நீங்கள் சுவிஸ் குடியுரிமை பெறுவதற்கு தடையாக அமையலாம். சரியாக வரி செலுத்தாதது, காப்பீட்டு பிரீமியம் செலுத்தாமல் இருப்பது, அபராதங்கள், வாடகை செலுத்தாமல் இருப்பது, கடன் நிறைய இருப்பது ஆகிய விடயங்களும் நீங்கள் பண விடயத்தில் பொறுப்பற்று இருப்பதாக கருதப்பட்டு குடியுரிமை மறுக்கப்படுவதற்கு காரணமாக அமையலாம்.


சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, வெளிநாட்டவர்கள் அரசு உதவியுடன் வாழ்வதும் குடியுரிமை மறுக்கப்படுவதற்கு காரணமாக அமையலாம். 



சொல்லப்போனால், நீங்கள் குடியுரிமை கோருவதற்கு மூன்று ஆண்டுகள் முன்பு அரசின் உதவி பெற்றிருந்தால்கூட உங்கள் குடியுரிமை விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.


ஆனாலும், நீங்கள் அரசிடமிருந்து உதவியாகப் பெற்ற பணம் அனைத்தையும் திருப்பிக் கொடுத்துவிட்டால், உங்கள் விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.  

No comments

Powered by Blogger.