இவை என்னவென்று தெரியுமா..?
"எவ்வளவு காலமா?"
"அது கன வருஷமா இரிக்கு, எல்லா வைத்தியமும் செஞ்சி பாத்தாச்சி. இப்ப நடக்கவே ஏலா"
"இந்த மூட்டு மாற்று சேர்ஜரிய செய்யச் சொல்லி சொல்லி இருப்பாங்களே"
"ஓம் சொன்னதான்"
"எப்ப"
"அதச் சொல்லி இப்ப ஒரு 5 வருஷம் ஆகுது"
"அப்ப ஏன் செய்யல்ல"
"பயத்துலதான்"
"என்ன பயம்?"
"நடக்காம உட்ருவமோ என்ட பயம்தான்"
"அப்ப இப்ப நல்லா நடக்குறீங்களா?"
"ஐயோ என்னால இப்ப நடக்கவே ஏலா, ஒன்டுக்கு ரெண்டுக்கு போய், என்ட வேலைகள செய்யவும் ஏலாம கிடக்கு"
"அப்ப இப்ப சேர்ஜரிய செய்ய ஒத்துக்குவீங்களா?"
"ஓம் வாப்பா, இதுக்கு மேல என்னால தாங்க ஏலா"
"எங்க x rayஎ பாப்பம்"
X rayஐ பார்த்ததும், திக் என்றது. மூட்டு தேய்ந்து, தேய்ந்த மூட்டு உரசும் போது வெளியாகும் நீர், ஜொயின்டினுள் சின்னச் சின்ன எலும்புகளை உருவாக்கி, ஜொயின்ட் முழுவதும் எலும்பாலான கற்கள் நிரம்பி இருந்தன.
"இந்த ஜொயின்டோட எப்பிடிம்மா நடக்குரீங்க?"
"என்னால ஏலா வாப்பா"
கூடவே பிள்ளைகள் வந்திருந்தார்கள்.
"இஞ்சப் பாருங்க, இதற்கு நோர்மலான ஜொயின்ட் போட ஏலுமோ தெரியா, ஏன்டா அப்பிடி அழிஞ்சி கிடக்கு. தியேட்டர்ல ஜொயின்ட்ட ஓப்பன் பண்ணிப் பாத்தாத்தான் விளங்கும் நோர்மல் ஜொயின்ட் போடலாமா இல்லையா என்டு. தியேட்டர்ல நோர்மல் ஜொயின்ட்தான் இரிக்கு. ஆனா பெக்கப்ல மத்த அட்வான்சான ஜொயின்ட் இல்லாம இத ஓப்பன் பண்ண ஏலா. நீங்க அந்த அட்வான்ஸான ஜொயின்டுக்கு காச கட்டினீங்க என்டா, அந்தக் கம்பனி அதோட வருவாங்க. நோர்மல் ஜொயின்ட்ட போட்டம் என்டா, உங்களுக்கு காச திரும்ப தந்திடுவாங்க."
பிள்ளைகள் ஒத்துக் கொண்டார்கள்.
ஒரு மாதிரியாக வெட்டிப் பிரட்டி, நோர்மல் ஜொயின்டையே போட்டாச்சி.
Dr Ahamed Nihaj
Teaching hospital, Batticaloa
Post a Comment