Header Ads



தொடர்ந்து பிரிக்கப் போகும் ரணில்


- Siva Ramasamy -


ரணில் எனும் ரணில் !


பொலிஸ் மா அதிபராக தேசபந்துவை நியமிக்குமாறுகோரி ஜனாதிபதி ரணிலிடம் பேசாத ஆட்கள் இல்லை.. 


எல்லா ராஜபக்சமாரும் பேசிக்களைத்து போயினர்.. பொலிசுக்கு பொறுப்பான அமைச்சர் டிரான் அலசும் தேசபந்துவுக்கு பரிந்து பேசியவர்தான்..


கடந்த மார்ச் மாதம் , இப்போதுள்ள ஐ.ஜீ .பியின்  பதவிக்காலம் முடிவடைந்தபோது ஜனாதிபதி செயலகத்தில் சந்திப்பொன்று நடந்தது.. 


‘தேசபந்துவா அடுத்த ஐ.ஜீ .பி ?’ என்று அதில் யாரோ கேட்க ‘ அதற்கென்ன போட்டா போச்சு’ என்று ரணில் பதில் கூற , தேசபந்துவை பொலிஸ் மா அதிபராக போட ரணில் சம்மதித்தார் என்று செய்தி வெளியே வந்தது..


இங்கேதான் கோட்டாவுக்கு இரசாயன உர விவகாரம் சனியனாக வந்தது போன்று  தேசபந்து தென்னக்கோனுக்கும் அந்த செய்தி ஆப்பாக அமைந்தது.. ‘நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லையே’ என்று மறுநாள் விளாசித் தள்ளினார் ரணில்..


அது நடந்து மூன்று மாதங்கள் கழித்து இப்போது மீண்டும் சந்தன பொலிஸ் மா அதிபருக்கு சேவை நீடிப்பு.. இடையில் தேசபந்து , பத்திநாயக்க , நிலந்த ஜயவர்தன ஆகிய ஐ.ஜீ.பி பதவிக்கு வரிசையில் நிற்கும் எவரையும் கருத்தில் கூட எடுக்க முடியாத அளவுக்கு பேராயர் மெல்கமின் அழுத்தம்.. 


ரணிலின் தயவில் தேர்தலை வென்று மஹிந்தவை பிரதமராக்கி சொந்த செலவில் தனக்குத்தானே சூனியம் வைத்துக்கொண்ட சிரிப்புசேன போன்று - ராஜபக்சக்களின் தயவில் வந்து தேசபந்துவை பொலிஸ் மா அதிபராக்கி , ராஜபக்சக்களை பலப்படுத்தும் அளவுக்கு ரணில் மூடர் அல்ல அரசியலில்..


தேசபந்துவின் ஐ.ஜீ.பி நியமனம் குறித்து ஜனாதிபதியுடன் பேசி அமைச்சர் டிரான் அலஸ் இறுதி முடிவை எடுப்பார் என்று நேற்றுமுன்தினம் ஒரு செய்தி வந்தது தெரியுமா?  யாரோ ஒருத்தன் டிரானுக்கு எதிராக அவிழ்த்துவிட்ட செய்தி அது..


ரணிலிடம் போய் டிரான் பேசுவாராம்.. ரணில் அதை கேட்டு இறுதி முடிவை எடுப்பாராம்.. என்பதுதான் அந்த செய்தி சொன்ன தகவல்..


நேற்று ரணிலுக்கும் டிரானுக்கும் பேச்சு நடந்தது.. வெறும் 5 நிமிடங்கள்.. வந்தார் முடிவை சொன்னார் சென்றார் ரணில்..  கேம் ஓவர்..


ஜனாதிபதி செயலக செய்திக்குறிப்பு நேற்று  சொன்னது ‘ அமைச்சர் டிரானின் சிபாரிசில் இப்போதுள்ள பொலிஸ் மா அதிபருக்கு சேவை நீடிப்பை வழங்கினார் ஜனாதிபதி ..’  


இப்போது அமைச்சர் டிரான் மீது ராஜபக்சக்களுக்கு கோபம்.. ஏன் தேசபந்துவுக்கும் கோபம் வருமே.. எங்களுடன் ஒன்றை கதைத்து ரணிலுடன் ஒன்றை கதைக்கிறாரோ என்று அவர் மீது சந்தேகம் வரும்.. சிபாரிசு செய்தது டிரான் என்றல்லவா வருகிறது.. 


இல்லை அப்படியில்லை என்று டிரான் மறுத்தால்  அமைச்சுப் பதவி போய் விடுமே.. இந்த சிக்கல்தான் ரணிலின் தேவையும் கூட..


பொலிஸ் மா அதிபர் சந்தன மூன்று மாத கால சேவை நீடிப்பின் பின்னர் கடந்த வாரம் ஓய்வு பெற்றபோது அவருக்கு பொலிஸ் அணிவகுப்பு மரியாதை வழங்கும் நிகழ்வு நடக்கவில்லை.. அப்படியென்றால் அவர் பதவியில் இருக்கப்போகிறார் என்றல்லவா அர்த்தம்..?


ரணிலின் அரசியல் சூட்சுமங்களை அறியாமல் புரியாமல் செயற்பட்டு இப்போது பொதுஜன பெரமுன மேலும் பல பிரிவுகளாக பிரிந்து கொண்டிருக்கிறது…


ரணில் இன்னும் பிரிக்கப்போகிறார்.. அவ்வளவுதான்..!

No comments

Powered by Blogger.