பொதுஜன பெரமுனவின் எதிர்காலம் எப்படியிருக்கும்..? ரணில் என்ன செய்கிறார் தெரியுமா..??
குருவிட்ட பகுதியில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
69 இலட்ச மக்களாணையை முன்னிலைப்படுத்தி செயற்படுகிறோம் என குறிப்பிடும் தகைமை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு கிடையாது. பொதுஜன பெரமுன நாட்டு மக்களுக்கு வழங்கிய ஆணையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மலினப்படுத்தியுள்ளார்.
தாம் அரசியல் செய்வதற்கான சூழலை ஜனாதிபதி ஏற்படுத்திக் கொடுத்தார் என பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குறிப்பிடுவது முட்டாள்தனமானது. பொதுஜன பெரமுனவின் அரசியல் செயற்பாடுகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே பலவீனப்படுத்தினார்.மக்களின் தன்னிச்சையான போராட்டத்தை அவர் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் எதிர்கால நிலைமை கவலைக்குரியது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொள்கையை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு என்ற பெயரில் நாட்டுக்கு எதிரான செயற்பாடுகளை அவர் முன்னெடுத்துள்ளார்.
நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு இலாபமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்க விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இலாபமடையும் டெலிகொம் நிறுவனத்தின் பங்குகளை பிரித்தானியாவில் வாழும் அல்லிராஜாவுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான சந்திப்புக்களில் ஜனாதிபதி ஈடுபட்டுள்ளார். இது முற்றிலும் முறையற்றது.
எந்தவிதமான அடிப்படையும் இன்றி இனத் து வேசத்தை மையமாக வைத்து உளவரும் இந்த வீணாப்போன வன்ஸயை பொதுமக்கள் அரசியலிலிருந்து ஓரம் கட்ட வேண்டும். அரகலயவின் அடிப்படை நோக்கங்களுள் ஒன்றாக இந்த விடயம் இடம் பெற வேண்டும்.
ReplyDelete