Header Ads



யூதர்களின் புனித நூலை, எரிப்புதற்கு சுவீடன் அனுமதி


குர்ஆன் எரிப்புக்கு அனுமதி கொடுத்த சுவீடன் நீதிமன்றம் தற்போது தவ்றாத் என்று அழைகபடுகின்ற யூதர்களின் வேதத்தையும் பொது வெளியில் எரிக்க அனுமதி கொடுத்துள்ளது.

இது யூதர்கள் மத்தியில் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

 தவ்றாத் எரிப்பை தடுத்து நிறுத்துங்கள் என்று யூத மத போதகர்களும் இஸ்ரேல் அரசும் ஸ்வீடனை கேட்டு கொண்டுள்ளது

மக்கள் புனிதமாக கருதும் எதையும் அவமதிப்பவர்கள் கண்டனத்திற்கு உரியவர்களே.

இன்று -15- இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே எரிப்பதற்கு அனுமதி கோரிய நபர் ஒருவருக்கு, அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுவீடனின் தேசிய வானொலி தெரிவித்துள்ளது.


அதேவேளை சுவீடன் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு ஐரோப்பிய யூதகாங்கிரஸ் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.


இதுபோன்ற ஆத்திரமூட்டும் இனவெறி மதவெறி நடவடிக்கைகளிற்கு எந்த நாகரீக சமூகத்திலும் இடமில்லை என ஐரோப்பிய யூத காங்கிரஸ் தெரிவித்துள்ளது.


மக்களின் ஆழமான மத மற்றும் கலாச்சார உணர்வுகளின் மீது ஏறிமிதிப்பது சிறுபான்மையினர் விரும்பத்தகாதவர்கள் மதிக்கப்படாதவர்கள் என்ற தெளிவான செய்தியை தெரிவிக்கின்றது எனவும் யூத அமைப்பு தெரிவித்துள்ளது.


அதேசமயம் இஸ்ரேலிய ஜனாதிபதியும் சுவீடன் வழங்கிய அனுமதியை கண்டித்துள்ளார். ஜூன் மாத இறுதியில் சுவீடனில் உள்ள மசூதிக்கு வெளியே நபர் ஒருவர் குரானை எரித்ததை தொடர்ந்து வன்முறைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. Please print your news little darker...because its hard to read for us

    ReplyDelete

Powered by Blogger.