Header Ads



பல கோடி பெறுமதியான, போதைப் பொருள் மீட்பு

 
- டிகேஜி கபில -


கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் பிரிவு மற்றும் கொழும்பு பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவொன்று புதன்கிழமை (26)  21 கோடி ‌ரூபாய்‌ பெறுமதியான தூள் செய்யப்பட்ட செயற்கை கஞ்சா மற்றும் செயற்கை ஆம்பெடமைன் ஆகிய போதைப்பொருட்களுடன் 07 சந்தேக நபர்களை கைது செய்ததாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


ஹொங்கொங்கிலிருந்து துபாய் வழியாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமானம் மூலம்  ஒரு தொகை சரக்குகள் அனுப்பட்டுள்ளது.


இந்நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஏர் கார்கோ பிரிவில் மூவர் இந்த சரக்குகளை எடுத்துச் செல்வதற்காக வந்த போது, ​​அவர்களுக்கு முன்னால் இந்த பார்சல் திறக்கப்பட்டது, அங்கு சுமார் 33 கிலோ கிராம் எடையுள்ள ஒரு கோடி ‌ரூபாய்‌ பெறுமதியான செயற்கை கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டதுடன் குறிப்பிட்ட நபர்களும்  கைது செய்யப்பட்டுள்ளனர்.


அவர்களிடம் இருந்து கிடைத்த மேலதிக தகவலின் அடிப்படையில், கொழும்பில் ஒரு வர்த்தக நிறுவனத் தலைவர் நடத்தும் சவுண்ட் சிஸ்டம் விற்பனைக் கடையில் இருந்து சுமார் 20 கோடி ‌ரூபாய்‌ பெறுமதியான 100 கிலோகிராம் செயற்கை ஆம்பெடமைன் பவுடர் கைப்பற்றப்பட்டது.


மேலும் கொழும்பு பத்தரமுல்ல பிரதேசத்தில் இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட ரஷ்ய பிரஜை உட்பட மூவரை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

No comments

Powered by Blogger.