Header Ads



சவேந்திர சில்வாவுக்கு, விமல் சவால் விடுப்பு


முன்னாள் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தமக்கு எதிராக வழக்கு தொடரும் வரையில் காத்திருப்பதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச பகிரங்க சவால் ஒன்றை விடுத்துள்ளார்.


விமல் வீரவன்ச எழுதிய “ஒன்பதில் மறைந்துள்ள கதை” என்ற நூலில் சவேந்திரா சில்வா தொடர்பில் கடுமையான விமர்சனங்களை விமல் வீரவன்ச வெளியிட்டிருந்தார்.


குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்பியது ஓர் சதித்திட்டம் எனவும், அமெரிக்காவிற்கும் சவேந்திரவிற்கும் தொடர்பு இருப்பதாகவும் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியிருந்தார்.


இந்த குற்றச்சாட்டுக்களை நிராகரித்த சவேந்திர சில்வா, விமலுக்கு எதிராக வழக்குத் தொடர்வதாக அறிவித்திருந்தார்.


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்பியது ஓர் சதித் திட்டம் எனவும் அமெரிக்காவிற்கும் சவேந்திரவிற்கும் தொடர்பு இருப்பதாகவும் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியிருந்தார்.


இந்த குற்றச்சாட்டுக்களை நிராகரித்த சவேந்திர சில்வா, விமலுக்கு எதிராக வழக்குத் தொடர்வதாக அறிவித்திருந்தார்.


இந்நிலையில் , தமக்கு எதிராக சவேந்திர வழக்குத் தொடர்ந்தால் நூலில் இல்லாத பல உண்மைகளை வெளிப்படுத்த முடியும் எனவும் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.