Header Ads



முஸ்லிம் மீடியா போரத்தின் அறிவித்தல்


ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 2023/2024ஆம் ஆண்டுக்கான புதிய நிறைவேற்றுக் குழுத் தெரிவு மற்றும் பதவிவழி நியமனங்கள் தொடர்பாக


ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 2023/2024ஆம் ஆண்டுக்காக தெரிவுசெய்யப்பட்ட புதிய நிறைவேறறுக்குழுவின் முதலாவது கூட்டம் போரத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் அல்ஹாஜ் என் எம் அமீன்  தலைமையில் 2023 ஜூலை 08ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது.


இதன்போது தலைவர், செயலாளர் மற்றும் பொதுச் பொருளாளர் ஆகிய மூன்று பிரதான பதவிகள் தவிர்ந்த ஏனைய பதவிகளுக்கான தெரிவும், போரத்தின் ஆலோசகர்கள், சட்ட ஆலோசகர்கள் மற்றும் 25 மாவட்டங்களுக்குமான இணைப்பாளர்களை நியமிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது. 


இதேவேளை, கடந்த ஜூன் மாதம் 25ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடார்ந்த மாநாட்டின் போது தலைவராக அல்ஹாஜ் என் எம் அமீனும் பொதுச் செயலாளராக ஷிஹார் அனீஸ் மற்றும் பொருளாளராக எம். எம். ஜெஸ்மின் ஆகியோரும் அல்ஹாஜ் எம்.ஏ.எம் நிலாம், மௌலவி எஸ். எம். எம். முஸ்தபா, அல்ஹாஜ் ஜாவித் முனவ்வர், அல்ஹாஜ் என். ஏ. எம். ஸாதிக் ஷிஹான், அல்ஹாஜ் ரிப்தி அலி, அஷ்ஷெய்க் ஜெம்ஸித் அஸீஸ், ஜனாப் எம். பி. எம். பைரூஸ், ஜனாப் இர்ஷாட் ஏ காதர்,  ஜனாப் எம். எப். ரிபாஸ் திருமதி ஷாமிலா ஷெரீப், திருமதி சமீஹா சபீர், டீ. ஜி. எம் .எஸ். எம் ராபி, அஷ்ரப் ஏ ஸமத்,  ஜே. எம். நாளிர் மற்றும் ஜனாப் எஸ்.எம். ஸாஹிர் ஆகிய 15 பேர் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களாகவும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.


இதற்கு மேலதிகமாக போரத்தின் யாப்பில் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள  அதிகாரத்தின் பிரகாரம் திருமதி புர்கான் பீ இப்திகார், அல்ஹாஜ் ஷம்ஸ் பாஹிம் மற்றும் இஸ்பஹான் சரீப்டீன் ஆகியோர் செயற்குழுவிற்கு நியமிக்கப்பட்டனர்.


இதேவேளை, 2023 ஜூலை 08ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற முதலாவது நிறைவேற்றுக் குழு கூட்டத்தின் பதவிவழியாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் விபரம் பின்வருமாறு :-


 உப தலைவர்களாக : அல்ஹாஜ் எம். ஏ. எம் நிலாம், எம். பி. எம். பைரூஸ், அல்ஹாஜ் ரிப்தி அலி தேசிய அமைப்பாளர்களாக இர்ஷாத் ஏ காதிர், அல்ஹாஜ் ஸாதிக் ஷிஹான், உப செயலாளர்களாக  : அல்ஹாஜ்  எம். எஸ். எம். பாஹிம், திருமதி ஷாமிலா ஷெரீப் உப பொருளாளர் : அஷ்ஷெய்க் ஜெம்ஸித் அஸீஸ், இணையத்தள ஆசிரியர் : டீ. ஜீ. எம். எஸ். எம் ராபி, இதழ் ஆசிரியர் : திருமதி சமீஹா சபீர், ஊடக ஒருங்கிணைப்பாளர்களாக :-  அஸ்ரப் ஏ சமத், அல்ஹாஜ் ஜாவித் முனவ்வர், ஜனாப் ஜே. எம். நாளிர் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.


இதேவேளை, இம்முறை போரத்தின் உறுப்பினர்களின் நலனை கருத்திற் கொண்டு பல்வேறு வேலைத்திட்டங்கள் மாவட்ட ரீதியில் முன்னெடுக்கவும் துறைசார் பயிற்சிகள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதுடன இதற்கென ஊடக பயிற்சிக்குழு ஒன்றும்   நியமிக்கப்பட்டுள்ளது. அதன் உறுப்பினர்கள் பின்வருமாறு :-  


ஷிஹார் அனீஸ், ஜனாப் இர்சாத் ஏ காதர், அல்ஹாஜ் ஸாதிக் ஷிஹான், எம். பி. எம். பைரூஸ், அல்ஹாஜ் ரிப்தி அலி, இஸ்பஹான் சர்ப்டீன், அல்ஹாஜ் எம். எஸ். பாஹிம், அல்ஹாஜ் ஜாவித் முனவ்வர், திருமதி ஷாமிலா ஷெரீப் மற்றும் திருமதி சமீஹா சபீர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


இதுதவிர, அண்மையில் நடைபெற்ற பொதுக் கூட்டம் பற்றிய விமர்சன மதிப்பாய்வு செய்யப்பட்டதுடன், போரத்தின் உறுப்பினர்களின் நன்மையை கருத்திற் கொண்டு எதிர்காலத்தில் பல்வேறு புதிய ஊக்குவிப்பு, நலன்புரி மற்றும் பயிற்சி திட்டங்களை அமுல்படுத்தவும், போரத்தின் உறுப்பினர் பட்டியலை டிஜிட்டல் மயமப்படுத்தி தரப்படுத்தவும் இதற்கு தேவையான யாப்புத் திருத்தம் போன்றவற்றை முன்னெடுத்து வினைத்திறன் மிக்க எதிர்காலத் திட்டங்களுக்கூடாக பலமிக்க அமைப்பாக மீடியா போரத்தை மீண்டும் கட்டியெழுப்புதல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டன.


 ஷிஹார் அனீஸ் 

பொதுச் செயலாளர்

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம்

No comments

Powered by Blogger.