மனநல சிகிச்சை பெற்றுவந்த நோயாளி, வைத்தியசாலை ஊழியர்களினால் கொலை
முல்லேரியா, அங்கொடை தேசிய மனநல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி வைத்தியசாலை உதவியாளர்கள் மூவரால் தாக்கப்பட்டு மரணித்துள்ளார்.
குறித்த சம்பவத்திற்குக் காரணமான வைத்தியசாலை உதவியாளர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (28 .07.2023) மாலை வேளையில் இருவரும், இரவு ஒருவருமாகக் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
48 வயதுடைய குறித்த நோயாளி 20 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் இந்த வாரம் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்த விசாரணைகளின் போது நோயாளி குழப்பமடைந்த நிலையில், கட்டுப்படுத்த முடியாத நிலையில் வைத்தியசாலை உதவியாளர்களினால் நோயாளி தாக்கப்பட்டதாகப் பொலிஸார்த் தெரிவித்துள்ளனர்.
நோயாளியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள வைத்தியசாலை உதவியாளர்கள் மூவர் இன்று சனிக்கிழமை (29.07.2023) புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Post a Comment