Header Ads



பாடசாலை மாணவியைக் காணவில்லை


அம்பாறை கல்மடுவ பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


குறித்த மாணவி கடந்த 28 ஆம் திகதி பாடசாலைக்கு சென்ற நிலையில், பாடசாலை பதிவேட்டில் அவரது பெயர் இடம்பெறாததை அடுத்து பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.


தனது மகள் காணாமல் போய்  இன்றுடன் 12 நாட்கள் கடந்துள்ள போதிலும் இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என மாணவியின் தாய் தெரிவித்துள்ளார்.


இது குறித்து காணாமல் போன மாணவியின் தாயார் தெரிவிக்கையில்.


“மகள் கடந்த 28 ஆம் திகதி காலை சைக்கிளில் தந்தையுடன் பாடசாலைக்கு சென்றாள். அப்பா பாடசாலையில் அவரை விட்டுவிட்டு வீடு திரும்பினார். பாடசாலை முடிந்து 2.15 அளவில் வீடு திரும்பும் மகள் அன்று வரவில்லை. பின்னர் 2.45 மணியளவில் பாடசாலைக்கு அழைப்பெடுத்தோம்.  ​​அன்று 11-ம் வகுப்பு மாணவர்களை வைத்துக்கொள்ளவில்லை என விளையாட்டு ஆசிரியர் கூறினார். பின்னர்  மகளின் பெயர் அன்றைய தினம் பதிவேட்டில் பதிவு செய்யப்படவில்லை என்றும் கூறினார், பின்னர் முறைப்பாடு செய்துள்ள போதிலும் 12 நாட்களாகியும் எந்த தகவலும் இல்லை” என்றார்.


சச்சினி சவிநத்யா சமரதுங்க என்ற 16 வயது மாணவி பாடசாலை சீருடையில் வீதியில் நடந்து சென்ற விதம் சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.

No comments

Powered by Blogger.